
வயலினிலே வரப்பில்லை
இது தந்தையின் ஏக்கம் ....!
மானத்துக்கு சேலையில்லை ,
வாழ்வினில் ஏக்கம் -இங்கே
வசந்தமோ துக்கம் -இங்கே !
மௌனத்தின் மயக்கம் -இங்கே


வா....அன்பே ....!
களங்கமில்லா நிலவுக்குள்
காலடி வைத்திடுவோம் ...!
நித்தமொரு காதல் செய்திடுவோம் ..
புத்தம் புது வாழ்வு வாழ்ந்திடுவோம் ...!
காதலை மறுக்கும்
பூமிதனை மறந்திடுவோம் ....,
காதலின் சின்னமாய்
நிலவுக்குள் வாழ்ந்திடுவோம் ...!
பழமைகளை கனலால் பொசுக்கிடுவோம் ...
புதுமைகளை நிலவுக்குள் பயிரிடுவோம் ...!
தோன்றும் துன்பங்களை தூக்கிலிடுவோம் ...
கிடைக்கும் இன்பங்களை ருசித்திடுவோம் ..!
மரணமில்லா வாழ்வு வாழ்ந்திடுவோம் ...
மறையும் வரை அன்புக் காதல் செய்திடுவோம் ...!
காதலின் கண்ணீரை துடைத்திடுவோம் ...
காதலில் தோல்வி இல்லை என்றாக்கிடுவோம் ...!
மோதல்களில்லா சமுதாயம் உருவாக்கிடுவோம் ...
ஜாதியற்ற விதைகளை விதைத்திடுவோம் ...
வரதட்சனையை காதலால் வதை செய்வோம் ..!
வாங்குவோரை துவம்சம் செய்வோம் ..!
கனவு மாளிகை ஒன்று கட்டுவோம் ....
உண்மைக் காதலர்களை அதில் குடியேற்றுவோம் ...!
புது உலகம் ஒன்றை செதுக்கிடுவோம் ....
"காதல் பூமி " எனப் பெயரிடுவோம் ...
வா...அன்பே ...
களங்கமில்லா நிலவுக்குள்
காலடி வைத்திடுவோம் ...!
"மீனு விக்குற கண்ணம்மா ...
கெண்டைமீனு விலை என்னம்மா ..
பார்த்ததுமே மயங்கிப்புட்டேன்..
பார்த்து விலை சொல்லம்மா ...!"
"நோட்டம் பார்க்கும் செல்லைய்யா..
கெண்டைமீனு விலை ஜாஸ்திய்யா ...
வாங்க சக்தி உனக்கில்லைய்யா ..உன்
இடுப்புக்கயிறை இருக்கிக்கிட்டு ..
வந்த வழியே செல்லைய்யா ...!"
***
"பூவு விக்கிற பொன்னம்மா ...
பூவு விலை என்னம்மா ..
கூடையுடன் வாங்கிக்கிறேன் ..என்னை
புரிஞ்சுக்கிட்டா என்னம்மா ...!"
"வாசம் பிடிக்கும் செல்லைய்யா ...என்
மச்சான் வந்திடுவார் செல்லையா ...
உன்னையும் என்னையும் பார்த்துப் புட்டா
உயிரை விட நீ ரெடியா ..."
***
மோரு விக்குற குருவம்மா ..
தாகம் எனக்கு ரொம்பம்மா ...
காசெவ்வளவு சொல்லம்மா ..
கொடுத்துடுறேன் மொத்தம்மா ..."
"விவரமான ஆளைய்யா ...நீ
பாவமான ஆளைய்யா
வித்துப் போச்சு மோரைய்யா ...
காத்து இருக்கேன் நாளைய்யா ...
கவலை வேண்டாம் செல்லையா ...!"
***
விறகொடிக்கும் வீரம்மா ...
வீட்டுப் பக்கம் வாயேம்மா ...
நாட்டுக்கோழி குழம்பு வச்சு
நாளு ரொம்ப ஆச்சும்மா ..."
"நாட்டுக்கோழி குழம்பு வச்சு
நாளு நாளா தூங்கலையே, .எம் புருசன்
நாளு நாளா தூங்கலையே ..
கூசாம கூப்பிடுரையே..
குசும்பு உனக்கு ரொம்பைய்யா ..!.
உன் அத்த மக அஞ்சுகம்
உட்கார்ந்திட்டா நேத்தைய்யா ...
ஊரெல்லாம் பேசுதைய்யா ...
ஊரைக்கூட்டி சொல்லைய்யா ...
தாலி ஒன்ன கட்டைய்யா ..உனக்கு
வேலி ஒன்னு போடய்யா ...
நாட்டுக் கோழி குழம்பு வச்சு...
நாசூக்கா சாப்பிடைய்யா...தினம்
நாசூக்கா சாப்பிடைய்யா ,,,!"


இளைஞனே ...
காதல் செய்....
காதல் வேண்டும்...!
தோற்றுப் போனால்
துவளாதே...!
தோற்றலும்
ஜெய்த்தலும்
காதலின் இலக்கணம்...!
திரும்பி பார்...
சரித்திரர்களின்..
சாம்ராஜ்யங்கள்
சாம்பலாகி...மண்ணோடு ...!
தோல்வியின்றி
வெற்றியில்லை ..
காதலிலும்தான் ...!
இலையுதிர்
காலங்களில்..
மரித்துப் போவதில்லை ...
மரம்...!
"இதயத்தில் இடமில்லை"
என்பதற்க்காக ..
"கல்லறையில் "
இடம் தேடலாமா...!
தூங்கினவன்
எழுந்ததாக ...
வாழ்ந்தோர்
சொன்னதுன்டோ ...!
"தாஜ்மஹால்"
மனைவிக்காகத்தான்
கட்டினான்..!
காதலிக்காக
அல்ல...!
அம்பிகாவதி..அமராவதி .
பார்வதி ..தேவதாஸ் ...
லைலா ..மஜ்னு ...
சலீம் ..அனார்க்கலி ...
காதலுக்கு ..மரியாதை
செய்தவர்கள்...!
காதலோடு ...
வாழ்ந்தார்களா ...!
"மூன்று முடிச்சு "
முப்பாலையும்
உனக்குணர்த்தும் ...!
அறிவாய்..
அப்போது ...
உண்மைக்காதலை ...!
சாதிக்கும்
நேரத்தில்...
சோதிக்கும்
காதலால்..
இலட்சியங்கள் ...
சவக்கிடங்கில்...!
நீ...
வாழவேண்டும் ..
எந் நாட்டு ...இளைஞனே ..!
இது ...
கதையல்ல ...
கவிதையுமல்ல ...!
உன்னிடம்
கேட்கும் ...
வரம்...!