"மீனு விக்குற கண்ணம்மா ...
கெண்டைமீனு விலை என்னம்மா ..
பார்த்ததுமே மயங்கிப்புட்டேன்..
பார்த்து விலை சொல்லம்மா ...!"
"நோட்டம் பார்க்கும் செல்லைய்யா..
கெண்டைமீனு விலை ஜாஸ்திய்யா ...
வாங்க சக்தி உனக்கில்லைய்யா ..உன்
இடுப்புக்கயிறை இருக்கிக்கிட்டு ..
வந்த வழியே செல்லைய்யா ...!"
***
"பூவு விக்கிற பொன்னம்மா ...
பூவு விலை என்னம்மா ..
கூடையுடன் வாங்கிக்கிறேன் ..என்னை
புரிஞ்சுக்கிட்டா என்னம்மா ...!"
"வாசம் பிடிக்கும் செல்லைய்யா ...என்
மச்சான் வந்திடுவார் செல்லையா ...
உன்னையும் என்னையும் பார்த்துப் புட்டா
உயிரை விட நீ ரெடியா ..."
***
மோரு விக்குற குருவம்மா ..
தாகம் எனக்கு ரொம்பம்மா ...
காசெவ்வளவு சொல்லம்மா ..
கொடுத்துடுறேன் மொத்தம்மா ..."
"விவரமான ஆளைய்யா ...நீ
பாவமான ஆளைய்யா
வித்துப் போச்சு மோரைய்யா ...
காத்து இருக்கேன் நாளைய்யா ...
கவலை வேண்டாம் செல்லையா ...!"
***
விறகொடிக்கும் வீரம்மா ...
வீட்டுப் பக்கம் வாயேம்மா ...
நாட்டுக்கோழி குழம்பு வச்சு
நாளு ரொம்ப ஆச்சும்மா ..."
"நாட்டுக்கோழி குழம்பு வச்சு
நாளு நாளா தூங்கலையே, .எம் புருசன்
நாளு நாளா தூங்கலையே ..
கூசாம கூப்பிடுரையே..
குசும்பு உனக்கு ரொம்பைய்யா ..!.
உன் அத்த மக அஞ்சுகம்
உட்கார்ந்திட்டா நேத்தைய்யா ...
ஊரெல்லாம் பேசுதைய்யா ...
ஊரைக்கூட்டி சொல்லைய்யா ...
தாலி ஒன்ன கட்டைய்யா ..உனக்கு
வேலி ஒன்னு போடய்யா ...
நாட்டுக் கோழி குழம்பு வச்சு...
நாசூக்கா சாப்பிடைய்யா...தினம்
நாசூக்கா சாப்பிடைய்யா ,,,!"
No comments:
Post a Comment