Thursday, December 8, 2011

எங்கே அவள் ...?


அவள் அணைப்பில் கவிழ்ந்திருந்தேன் ,
முதுகில் முகம் உரச 'அத்தான்" என்றழைத்தாள் !
புரண்டு படுத்தேன் ,மார்பில் முகம் புதைத்தாள் !

மார்பு ரோமத்தை கைகளால் வருடியபடியே
'அன்பரே,ஏனிந்த மௌனம் ?'என்றாள் !
காதலாள் அணைப்பினில் காலம் கடக்கையிலே ,
வாய் வார்த்தைகட்கு இங்கென்ன
வேலையென்றேன் ,மௌனமாய் சிரித்தபடி
"கொடுப்பதற்கு எதுமுண்டோ " என்றேன் !
சத்தமின்றி யொரு முத்தம் தந்தாள் !

காலம் கடக்கையிலே முடிவுரையின் முன்னுரையை
துவக்க நான் முனைந்த போது ..செவிப்பறையை
கிழியும்படி 'பாலு ' என்ற குரல் கேட்டு
ஒரு கனம் திடுக்கிட்டேன் !ஆடைகளை சரி செய்து
கதவின் தாழ்விலக்கி வாசலிலே விழி வைத்தேன் ,
அழைத்தார் யாரும் காண வில்லை ,அருகேயும் ஆளில்லை !
இங்கிதம் தெரியாமல் இந்நேரம் குரல் கொடுத்த
நபரை நான் வைது கொண்டே ...விட்ட
இடந் தொடர விரைவாய் நான் முயன்ற போது ,
அறையே அதிரும்படி மீண்டும் அதே குரல் !
அறைக்குள்ளையே குரல் கேட்க ,
இருவருமே அதிர்ந்திட்டோம் !அழைத்தவரெவர்
என்பது போல் அவளை நான் நோக்க ,
அத்தானின் பெயர் சொல்லி நான் அழைப்பேனா ?
என்பதுபோல் மறுப்பாய் தலை அசைத்தாள் !

நிலை குலைந்த ஆடைகளை பயத்துடனே சரி செய்து ,
கதவிடுக்கில் கண்பதித்து நோக்கினேன் ,
சன்னலையும் மெல்லத் திறந்து பார்த்தேன் ,
ஆட்களை காணவில்லை ....காதலாள்
கட்டிலின் அடியிலும் தேடினாள் ,எவருமிலர் !
அதிர்ச்சியாய் .உறைந்த போது ,வெகுவாய்
பழக்கப்பட்ட அதே குரல்
'பாலு 'என்று எதிரொலிக்க திடுக்கிட்டுக்
கண் விழித்தேன் ,எதிரே என்னறைத் தோழன் ராஜா ,
மணியோ ஐந்தடிக்க ஐந்து நிமிடமே உள ,
இன்னும் ஏனிந்த உறக்கம் ?உடனே விழித்தெழு ,
விரைவாய் செயல் பட்டு வேலைக்குச் செல் என்றான் !

குழப்பமாய் சுற்றும் முற்றும் பார்த்து நோக்கியபடியே
காதலாள் காணவில்லை ,அதிர்ச்சியால் சிலையானேன் ,
கனவை நோவதா? எழுப்பிய நண்பனை நோவதா?
நினைவுகள் அசைபோட்டு மெல்லச் சிரித்தேன் .
காலையிலயே பல்லிளிக்கும் காரணம் கேட்டான் நண்பன் .
என்ன சொல்ல ?மீண்டும் சிரிப்பை பதிலாக்கினேன் ,
ஏதோ ஆகி விட்டதென்று கேட்பதையும் நிறுத்தி விட்டான் !
வெட்கம் முகத்தில் வர 'கனவை 'நான் நொந்து கொண்டே
பற்குச்சில் பற்பசையை பக்குவமாய் அழுத்தி விட்டு .,
குளியல் அறை நோக்கி ..விரைவாய் நடை போட்டேன் !!

'



No comments:

Post a Comment