
ஒரு தீக்குச்சியின் வெப்பத்திலே
கனலாகும் உலகமிது ...!
காற்றை சுவாசிக்க மறந்தாலே
மடிந்து போகும் உடலிது ...!
தூக்கமும் ஒரு வகை மரணம்தான் ,
எழுந்தால்தான் நம்பும்
இவ்வுலகம் ...நீ
இறக்கவில்லையென்று ...!
விதையின் வேலை
வேர் விடுவது ..விருட்சமாவது .!
பிறப்பின் சூட்சமம்
வாழ்வது ...வாழ்ந்து காட்டுவது ...!
உன் பார்வையில்தான்
கனல் கக்கும் சூரியனும்
குளுமை தரும் நிலாவும் .
வாழ்வின் சூட்சமும் இதுவே ...
துன்பமும் ...இன்பமும் !
துன்பமின்றி ...இன்பம்
எப்போதும் ..எங்கேயும் இல்லை ...!
எழுந்து வா......
இன்னும் அதிக துன்பப்படுவோம் ....
துன்பத்திலே ....
இன்பம் காண்போம் ...!
“தூக்கமும் ஒரு வகை மரணம்தான், எழுந்தால்தான் நம்பும் இவ்வுலகம் ...நீ
ReplyDeleteஇறக்கவில்லை யென்று !” என்ற வரிகளை மிகவும் ரசித்தேன். ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள்?