Friday, December 16, 2011

நண்பனே ...!


விழி நீரைத் துடைத்திடு ,
நேர் கொண்டு பார்த்திடு ,
விடிகின்ற பொழுதெல்லாம்
நமக்கென்று பாடிடு !

புன்னகையை சூடிடு ,
பொறுமையுடன் விளங்கிடு ,
சுமைகள் யாவும் தூசியென
சொந்தங்களை அணைத்திடு !

கயவர்களை விரட்டிடு ,
கடமைதனை போற்றிடு ,
தூங்கியது போதுமென்று
வீறுகொண்டு எழுந்திடு !

அரசியலை அழித்திடு ,
அமைதியனை விதைத்திடு ,
அஹிம்சை ஒன்றே போதுமென்று
அறப்போர் நடத்திடு !

தோல்விகளை களைந்திடு,
உறுதியுடன் உழைத்திடு ,
நேர்மை கொண்ட நெஞ்சுக்கு
வெற்றியென முழக்கமிடு !

********************************

Thursday, December 15, 2011

மௌனத்தின் மயக்கம் ...!


வயலினிலே வரப்பில்லை
வந்த மழை பெய்யவில்லை ,
வட்டியிலே சோறு இல்லை ,
வாழ்வதற்கு வழி தெரியவில்லை !
இது தந்தையின் ஏக்கம் ....!

மானத்துக்கு சேலையில்லை ,
கூரையிலே ஓலையில்லை ,
விழிகளுக்கு ஈரமில்லை ,
இமைகளுக்கு வேலையில்லை ,
இது தாயின் துக்கம் ....!

கூந்தலிலே என்னையில்லை ,
கொண்டையிலே பூவுமில்லை ,
கூடிச் சேர மனமுமில்லை ,
கொண்டவனுக்கோ ஆசையுமில்லை .,
இது தாரத்தின் ஏக்கம் ....!

வாரிக் கொடுக்க வசதியில்லை ,
வான் நிலவும் சிரிக்க வில்லை ,
வார்த்தைக்கு அர்த்தமில்லை ,
வாழ்க்கையோ புரியவில்லை ....!
இது என் துக்கம் ....!

வாழ்வினில் ஏக்கம் -இங்கே
பாதியில் தூக்கம் !
வசந்தமோ துக்கம் -இங்கே !
வறுமையோ பக்கம் !
நட்பிடம் மஞ்சம் -இங்கே
உறைவிடம் வஞ்சம் !
உள்ளத்தில் கலக்கம் -இங்கே
உண்மைக்கு வெட்கம் !
மௌனத்தின் மயக்கம் -இங்கே
மாறி விட்டால் மணக்கும் ..!

Thursday, December 8, 2011

எங்கே அவள் ...?


அவள் அணைப்பில் கவிழ்ந்திருந்தேன் ,
முதுகில் முகம் உரச 'அத்தான்" என்றழைத்தாள் !
புரண்டு படுத்தேன் ,மார்பில் முகம் புதைத்தாள் !

மார்பு ரோமத்தை கைகளால் வருடியபடியே
'அன்பரே,ஏனிந்த மௌனம் ?'என்றாள் !
காதலாள் அணைப்பினில் காலம் கடக்கையிலே ,
வாய் வார்த்தைகட்கு இங்கென்ன
வேலையென்றேன் ,மௌனமாய் சிரித்தபடி
"கொடுப்பதற்கு எதுமுண்டோ " என்றேன் !
சத்தமின்றி யொரு முத்தம் தந்தாள் !

காலம் கடக்கையிலே முடிவுரையின் முன்னுரையை
துவக்க நான் முனைந்த போது ..செவிப்பறையை
கிழியும்படி 'பாலு ' என்ற குரல் கேட்டு
ஒரு கனம் திடுக்கிட்டேன் !ஆடைகளை சரி செய்து
கதவின் தாழ்விலக்கி வாசலிலே விழி வைத்தேன் ,
அழைத்தார் யாரும் காண வில்லை ,அருகேயும் ஆளில்லை !
இங்கிதம் தெரியாமல் இந்நேரம் குரல் கொடுத்த
நபரை நான் வைது கொண்டே ...விட்ட
இடந் தொடர விரைவாய் நான் முயன்ற போது ,
அறையே அதிரும்படி மீண்டும் அதே குரல் !
அறைக்குள்ளையே குரல் கேட்க ,
இருவருமே அதிர்ந்திட்டோம் !அழைத்தவரெவர்
என்பது போல் அவளை நான் நோக்க ,
அத்தானின் பெயர் சொல்லி நான் அழைப்பேனா ?
என்பதுபோல் மறுப்பாய் தலை அசைத்தாள் !

நிலை குலைந்த ஆடைகளை பயத்துடனே சரி செய்து ,
கதவிடுக்கில் கண்பதித்து நோக்கினேன் ,
சன்னலையும் மெல்லத் திறந்து பார்த்தேன் ,
ஆட்களை காணவில்லை ....காதலாள்
கட்டிலின் அடியிலும் தேடினாள் ,எவருமிலர் !
அதிர்ச்சியாய் .உறைந்த போது ,வெகுவாய்
பழக்கப்பட்ட அதே குரல்
'பாலு 'என்று எதிரொலிக்க திடுக்கிட்டுக்
கண் விழித்தேன் ,எதிரே என்னறைத் தோழன் ராஜா ,
மணியோ ஐந்தடிக்க ஐந்து நிமிடமே உள ,
இன்னும் ஏனிந்த உறக்கம் ?உடனே விழித்தெழு ,
விரைவாய் செயல் பட்டு வேலைக்குச் செல் என்றான் !

குழப்பமாய் சுற்றும் முற்றும் பார்த்து நோக்கியபடியே
காதலாள் காணவில்லை ,அதிர்ச்சியால் சிலையானேன் ,
கனவை நோவதா? எழுப்பிய நண்பனை நோவதா?
நினைவுகள் அசைபோட்டு மெல்லச் சிரித்தேன் .
காலையிலயே பல்லிளிக்கும் காரணம் கேட்டான் நண்பன் .
என்ன சொல்ல ?மீண்டும் சிரிப்பை பதிலாக்கினேன் ,
ஏதோ ஆகி விட்டதென்று கேட்பதையும் நிறுத்தி விட்டான் !
வெட்கம் முகத்தில் வர 'கனவை 'நான் நொந்து கொண்டே
பற்குச்சில் பற்பசையை பக்குவமாய் அழுத்தி விட்டு .,
குளியல் அறை நோக்கி ..விரைவாய் நடை போட்டேன் !!

'



Wednesday, September 14, 2011

காதல் பூமி ..!

வா....அன்பே ....!

களங்கமில்லா நிலவுக்குள்

காலடி வைத்திடுவோம் ...!

நித்தமொரு காதல் செய்திடுவோம் ..

புத்தம் புது வாழ்வு வாழ்ந்திடுவோம் ...!

காதலை மறுக்கும்

பூமிதனை மறந்திடுவோம் ....,

காதலின் சின்னமாய்

நிலவுக்குள் வாழ்ந்திடுவோம் ...!

பழமைகளை கனலால் பொசுக்கிடுவோம் ...

புதுமைகளை நிலவுக்குள் பயிரிடுவோம் ...!

தோன்றும் துன்பங்களை தூக்கிலிடுவோம் ...

கிடைக்கும் இன்பங்களை ருசித்திடுவோம் ..!

மரணமில்லா வாழ்வு வாழ்ந்திடுவோம் ...

மறையும் வரை அன்புக் காதல் செய்திடுவோம் ...!

காதலின் கண்ணீரை துடைத்திடுவோம் ...

காதலில் தோல்வி இல்லை என்றாக்கிடுவோம் ...!

மோதல்களில்லா சமுதாயம் உருவாக்கிடுவோம் ...

ஜாதியற்ற விதைகளை விதைத்திடுவோம் ...

வரதட்சனையை காதலால் வதை செய்வோம் ..!

வாங்குவோரை துவம்சம் செய்வோம் ..!

கனவு மாளிகை ஒன்று கட்டுவோம் ....

உண்மைக் காதலர்களை அதில் குடியேற்றுவோம் ...!

புது உலகம் ஒன்றை செதுக்கிடுவோம் ....

"காதல் பூமி " எனப் பெயரிடுவோம் ...

வா...அன்பே ...

களங்கமில்லா நிலவுக்குள்

காலடி வைத்திடுவோம் ...!

கானா ..பாட்டு !

"மீனு விக்குற கண்ணம்மா ...

கெண்டைமீனு விலை என்னம்மா ..

பார்த்ததுமே மயங்கிப்புட்டேன்..

பார்த்து விலை சொல்லம்மா ...!"

"நோட்டம் பார்க்கும் செல்லைய்யா..

கெண்டைமீனு விலை ஜாஸ்திய்யா ...

வாங்க சக்தி உனக்கில்லைய்யா ..உன்

இடுப்புக்கயிறை இருக்கிக்கிட்டு ..

வந்த வழியே செல்லைய்யா ...!"

***

"பூவு விக்கிற பொன்னம்மா ...

பூவு விலை என்னம்மா ..

கூடையுடன் வாங்கிக்கிறேன் ..என்னை

புரிஞ்சுக்கிட்டா என்னம்மா ...!"

"வாசம் பிடிக்கும் செல்லைய்யா ...என்

மச்சான் வந்திடுவார் செல்லையா ...

உன்னையும் என்னையும் பார்த்துப் புட்டா

உயிரை விட நீ ரெடியா ..."

***

மோரு விக்குற குருவம்மா ..

தாகம் எனக்கு ரொம்பம்மா ...

காசெவ்வளவு சொல்லம்மா ..

கொடுத்துடுறேன் மொத்தம்மா ..."

"விவரமான ஆளைய்யா ...நீ

பாவமான ஆளைய்யா

வித்துப் போச்சு மோரைய்யா ...

காத்து இருக்கேன் நாளைய்யா ...

கவலை வேண்டாம் செல்லையா ...!"

***

விறகொடிக்கும் வீரம்மா ...

வீட்டுப் பக்கம் வாயேம்மா ...

நாட்டுக்கோழி குழம்பு வச்சு

நாளு ரொம்ப ஆச்சும்மா ..."

"நாட்டுக்கோழி குழம்பு வச்சு

நாளு நாளா தூங்கலையே, .எம் புருசன்

நாளு நாளா தூங்கலையே ..

கூசாம கூப்பிடுரையே..

குசும்பு உனக்கு ரொம்பைய்யா ..!.

உன் அத்த மக அஞ்சுகம்

உட்கார்ந்திட்டா நேத்தைய்யா ...

ஊரெல்லாம் பேசுதைய்யா ...

ஊரைக்கூட்டி சொல்லைய்யா ...

தாலி ஒன்ன கட்டைய்யா ..உனக்கு

வேலி ஒன்னு போடய்யா ...

நாட்டுக் கோழி குழம்பு வச்சு...

நாசூக்கா சாப்பிடைய்யா...தினம்

நாசூக்கா சாப்பிடைய்யா ,,,!"

Sunday, October 3, 2010

மனிதா ...!


மனிதா ...
பணத்தைப் போட்டு
பாவம் செய்கிறாய் ...!
செய்த பாவத்திற்கு
பரிகாரம் உண்டியலா....
செய்யப்போகும் பாவத்திற்கு
பரிகாரம் உண்டியலா...!

உண்டியலில்
பணம் போட்டால்
பாவம் தீருமா...?
சபித்தவர்களின்
சாபம் மாறுமா...?


எந்த சாமி
உண்டியல் கேட்டது...?
நீ போடும் பணத்தால்தான்
உயிர் வாழ்கிறேன் என்றது ...?

நீ போட்ட பணத்தால் ..
எத்தனை சாமிகள்
சுவீஸ் கணக்கு வைத்திருக்கிறது
உனக்குத் தெரியுமா ...?

ஓசோன் படலத்தில்
ஓட்டை .....!
உண்டியல் போட்டாலும்
உயிர் வாழ முடியாது ...!

"மதத்தை அழிப்போம்
மரம் வளர்ப்போம் "
கோஷம் போடு ...உன்
குலமும் மிஞ்சும்
குலதெய்வமும் மிஞ்சும்..!

கொட்டிக் கிடக்கிறதா ..பணம் ,
கோவிலில் போடாதே ...,
கோவில் கட்டாதே ...!
மோதல்கள் போதும் ...!

குளம் வெட்டு
கும்பிடுகிறோம் ...!
படிக்க பள்ளி கட்டு ...
பகுத்தறிவைக் கொடு ..
பாதம் தொடுகிறோம் ...!

நம்பிக்கையை விதைத்து
தன்னம்பிக்கையை கொடு ...
நாளைய சமுதாயமாவது
நலம் பெறட்டும் ...!

Friday, September 10, 2010

இளைஞனே ...காதல் செய்....!


இளைஞனே ...

காதல் செய்....

காதல் வேண்டும்...!


தோற்றுப் போனால்

துவளாதே...!

தோற்றலும்

ஜெய்த்தலும்

காதலின் இலக்கணம்...!


திரும்பி பார்...

சரித்திரர்களின்..

சாம்ராஜ்யங்கள்

சாம்பலாகி...மண்ணோடு ...!

தோல்வியின்றி

வெற்றியில்லை ..

காதலிலும்தான் ...!


இலையுதிர்

காலங்களில்..

மரித்துப் போவதில்லை ...

மரம்...!


"இதயத்தில் இடமில்லை"

என்பதற்க்காக ..

"கல்லறையில் "

இடம் தேடலாமா...!


தூங்கினவன்

எழுந்ததாக ...

வாழ்ந்தோர்

சொன்னதுன்டோ ...!


"தாஜ்மஹால்"

மனைவிக்காகத்தான்

கட்டினான்..!

காதலிக்காக

அல்ல...!


அம்பிகாவதி..அமராவதி .

பார்வதி ..தேவதாஸ் ...

லைலா ..மஜ்னு ...

சலீம் ..அனார்க்கலி ...

காதலுக்கு ..மரியாதை

செய்தவர்கள்...!

காதலோடு ...

வாழ்ந்தார்களா ...!


"மூன்று முடிச்சு "

முப்பாலையும்

உனக்குணர்த்தும் ...!


அறிவாய்..

அப்போது ...

உண்மைக்காதலை ...!


சாதிக்கும்

நேரத்தில்...

சோதிக்கும்

காதலால்..

இலட்சியங்கள் ...

சவக்கிடங்கில்...!

நீ...

வாழவேண்டும் ..

எந் நாட்டு ...இளைஞனே ..!


இது ...

கதையல்ல ...

கவிதையுமல்ல ...!

உன்னிடம்

கேட்கும் ...

வரம்...!