பார்க்க மட்டுமே தெரிந்த
என் கண்களுக்கு ,
கண்ணீரை வரவழைக்க
கற்றுக் கொடுத்தவளே ...!
என் காதலை
காகிதத்தில் எழுதினேன்- அதில்
கப்பல் செய்து
காட்டாற்றில் விட்டு விட்டாய் !
கப்பல் மூழ்கி விடலாம்..என்
காதல் மூழ்காது...!
நான்
காணும் கனவுகளுக்கு
கப்பம் கட்டிக்கொண்டு இருக்கிறேன்..
நீ
வராமல் இருந்து விடுவாயோ..
என்ற பயத்தில்...!
நம் காதலுக்கு எதிரி யார்...
காசா..கடவுளா...
மதமா...ஜாதியா..
சொல் பாவையே சொல்...!
''..நான்
ReplyDeleteகாணும் கனவுகளுக்கு
கப்பம் கட்டிக்கொண்டு இருக்கிறேன்..''
வாழ்த்துகள் தொடருங்கள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
அன்புச் சகோதரிக்கு வணக்கம் ...என் வலைக்கு வந்ததே ,,பாக்கியம் ..! தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..வாழ்க வளமுடன் !
ReplyDelete